ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் மறுப்பு

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் மறுப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கைகளை மீறியுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையைமீண்டும் திறக்க முடியாது என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளமையானது, உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாகப் பிடிப்பதற்குச் சமம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்: “ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், வாக்குறுதிகளை மீறுவதும், தடைகளை விதிப்பதும், அச்சுறுத்தல் விடுப்பதும் உண்மையான பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடைகளாக அமையும்.” என கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த 36 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பமாகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான பாதையில் நகர்வதாக ‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டிரம்ப், “அது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (22) முடிவடையவிருந்த போர்நிறுத்தத்தை, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று நீடிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராஜதந்திர முயற்சிகளுக்கு இடமளிக்கும் வகையில் போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், நீரிணையைத் திறக்க ஈரான் மறுத்துள்ளமை இப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )