
ஊழல் வழக்குகள் ; ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
அரசு வீட்டு திட்டத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் ஒரு வழக்கு நிலம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பானதாகவும், மற்றொரு வழக்கு ரஜுக் புதிய நகரம் திட்டத்தின் கீழ் பிளாட் ஒதுக்கீட்டில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட பெரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

