சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களை தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டன் நகருக்கு தனிப்பட்ட விஜயமாகச் சென்றமைக்காக அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சமன் ஏக்கநாயக்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் மேற்கண்ட பிணை உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )