AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது

AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அவர்கள் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த மாணவர்களை மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )