பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் வாக்கெடுப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் வாக்கெடுப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய ஆகஸ்ட் 05ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை மேற்படி தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )