
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூன்று பேரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் இன்று (12) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களான மூன்று தொழிலதிபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். மூவரும் அவர்களின் உடைமைகளில் 113,000 வெளிநாட்டு தயாரிப்பு பிளாட்டினம் மற்றும் மான்செஸ்டர் சிகரெட்டுகள் அடங்கிய 565 சிகரெட் அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

