எம்மை விமர்சித்துக் கொண்டே, நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் இப்போது IMF உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது

எம்மை விமர்சித்துக் கொண்டே, நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் இப்போது IMF உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது

இந்நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிகளை அதிகபட்சமாக அவர்களுக்கு வழங்க வேண்டும். வீடுகளை சுத்தப்படுத்தி, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து, குழந்தைகளைப் பராமரத்து, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி உதவிகளைச் செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அறிவிப்புச் செய்த இந்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை கள விஜயங்களின் போது அறிய முடிகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், திட்டமிட்டபடி உதவி பெற வேண்டியவர்களுக்கு அந்த உதவி போய் சேராத நிலை காணப்படுகின்றன.

எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உதவி வழங்கப்படுவதாக விளம்பரம் செய்வது போல் அந்த உதவி உண்மையில் மக்களைச் போய்ச்சேர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட சென்ற வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன. அதனை மறுக்க முடியாது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் அது புயலாக உருவெடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் போது, ​​அதனைக் கருத்தில் கொண்டு இடர் முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

மக்கள் மீது ஏற்படும் பாதிப்புக்களையும், அழுத்தங்களையும் குறைத்திருக்க முடியும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முடிந்திருக்கும்.

அனர்த்தம் வரப்போவதாகத் தெரிந்திருந்தும், இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை செயலிழந்து போய் காணப்பட்டது. நமது நாடு சுனாமியால் பாதிக்கப்பட்டது. அதன்பின்னரேனும் டாப்ளர் ரேடார் கட்டமைப்பை எம்மால் இன்னும் நிறுவ முடியாமல் தானே போய்யுள்ளது.

நான் இந்த டாப்ளர் ரேடார் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் 2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் வினவியிருக்கிறேன். ஆனால் எந்த பதிலையும் உரிய அரசாங்கங்கள் முன்வைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு பேரிடருக்கும் பின்னும் அரசியல்வாதிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இக்கட்டான காலங்களில் ஓடி ஒழியாமல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும். பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தாமல் இருப்பதும் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும். அதேபோல், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் மிகவும் தாமதமாகச் செய்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது குறைநிரப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளது. நாம் ஏலவே இதனைச் சொன்னோம். நாடு முகம்கொடுத்திருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டி IMF உடன் பேசுமாறு நாம் பல முறை கோரிக்கை விடுத்து வந்தோம். நாம் கூறி வந்த ஒவ்வோரு சந்தர்ப்பங்களிலும் அதனைப் புறக்கணித்து விட்டு, இப்போது அரசாங்கம் IMF உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது.

நிபந்தனை தளர்த்திக் கொள்வது எவ்வாறு என்று பேச ஆரம்பித்துள்ளது. இதனைத் தான் நாம் ஏலவே சொன்னோம். நிலைமைகளை கையாளும் விடயத்தில் அரசாங்கம் இன்னும் செயற்றிடனோடு நடந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பக்கம் நின்று, நாடு குறித்த சரியான நிலைப்பாட்டை அறிந்து அரசாளுகைக்கு நாம் சரியானதையே சொன்னோம். IMF உடன் பேச்சு நடத்தி நிபந்தனைகளை தளர்த்து மக்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களே முக்கியம்.

யார் தடையாக இருந்தாலும், எந்த வரம்புகளையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி பாடுபடும்.

எனவே ஆணவம் கர்வம் காட்டாது, சரியான நிலைப்பாடுகளை எடுத்து பேரிடரால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளை நமது சொந்த பிரச்சினைகளாகக் கருதி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )