
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன கைது
243.8 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சொத்து சேர்ப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

