
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை இன்று (10) வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில் ”பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியுள்ளது., நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின் பொறுப்பாகும்.
புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு , இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என நம்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.


